தமிழ்நாடு சட்டப்பேரவையில் "டிஜிட்டல் ஹவுஸ்" திட்டம் அமல்
காகிதமில்லா பேரவையை நடத்தும் வகையில் டிஜிட்டல் ஹவுஸ் எனும் புதிய திட்டம் சட்டப்பேரவையில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் படி, பேரவையில் கேள்வி கேட்பவர், பதில் சொல்பவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன், கேள்வி பதில் குறித்த தகவல்கள் தொடுதிரை மூலம் ஒளிபரப்பப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், ஆலங்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் தொடங்க அரசு முன்வருமா? என்று எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் அளித்த பதில் தொடுதிரையில் முதன்முறையாக காண்பிக்கப்பட்டது.
Comments